Bus steps boken
மாவட்ட செய்திகள்
கழன்று விழுந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு
அரசுப் பேருந்து, ஆவத்திபாளையம் அருகே வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது படிக்கட்டு கழன்று விழுந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க பட்டிக் கட்டு கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குமாரபாளையத்திலிருந்து ஈரோடு வரை செல்லும் அரசுப் பேருந்து, ஆவத்திபாளையம் அருகே வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது படிக்கட்டு கழன்று விழுந்தது. பேருந்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், காயமின்றி உயிர் தப்பினர்.
இதையும் படியுங்கள் : தார் ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில் பற்றி எரிந்த லாரி
