

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் சிரமமடைவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவாடா பகுதியில் இருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு கால்களை உரசியபடியும்,
ஜன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு மேற்கூரை மீது ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் பள்ளி நேரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை என தெரிவித்த பயணிகள் பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.