

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அரசு கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கல்லூரியில் சுற்றுச்சுவர் இல்லை என்றும், வளாகத்தில் உள்ள மண் சாலையால் மாணவர்கள் மழைக்காலத்தில் சேற்றில் நடந்து செல்லும் நிலை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், உடனடியாக அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கூறி கல்லூரி வளாகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.