New Project - 2025-05-28T200015
மாவட்ட செய்திகள்
கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து... கார் பேட்டரியில் இருந்து தீ பரவியதாக தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூரில் கார்களை பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டரில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூரில் கார்களை பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டரில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது.
அதிகாலையில் சர்வீஸ் சென்டரில் இருந்து புகை கிளம்பிய நிலையில் அருகிலிருப்பவர்கள் உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர் வருவதற்குள் கார்களில் தீப்பற்றி முழுவதும் எரியத் தொடங்கியது.
இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் நிறுத்தி வைத்திருந்த கார்களில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பரவியதாக தெரிகிறது.

