MYD Car damaged
மாவட்ட செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த மகிமலையாற்றில் பாய்ந்த கார்
காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மகிமலையாற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கடையூரில் இருந்து பொறையார் நோக்கி சென்ற கார், சாலை திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மகிமலையாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
