ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்கை நீர் பொங்கி வரும் நிகழ்வு

கிணற்றில் பொங்கி வரும் நீர் வாளியில் இறைக்கப்பட்டு பக்தர்கள் மீது ஊற்றப்பட்டது.
TNJ Temple event
TNJ Temple event
Published on: 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்கை நீர் பொங்கி வரும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபாடு செய்தனர். ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை நாளில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் இல்லக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாகவும், அந்த புனித நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் கார்த்திகை அமாவசையான இன்று புனித நீர் கிணற்றுக்கு விஷேச பூஜை செய்யப்பட்டது. பின்னர் கிணற்றில் பொங்கி வரும் நீர் வாளியில் இறைக்கப்பட்டு பக்தர்கள் மீது ஊற்றப்பட்டது. இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

newstamil.tv