Kaviyaruvi
Kaviyaruvi

கவியருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் காட்டாற்று வெள்ளம்... தொடர் மழையால் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்

கோவை ஆழியார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கவியருவியில் ஐந்தாவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Published on: 

கோவை ஆழியார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கவியருவியில் ஐந்தாவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து நீர் நிலைகளிலும் வேகமாக நிரம்பி வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஆழியார் கவியருவில் ஐந்தாவது நாட்களாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது .

இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்த வனத்துறை மறு அறிவிப்பு வரை தடை தொடரும் என தெரிவித்துள்ளது.

newstamil.tv