TRY Road
மாவட்ட செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலை
திருப்பைஞ்ஞீலி ஊராட்சியை இணைக்கும் 3 கிலோ மீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெள்ளறை ஊராட்சியில் இருந்து திருப்பைஞ்ஞீலி ஊராட்சியை இணைக்கும் 3 கிலோ மீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

