

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில், இருசக்கர வாகனம் மோதியதில் வடமாநில இளைஞர் படுகாயமடைந்தார். விருதாச்சலத்தில் கடையில் பணிபுரியும் ராஜஸ்தானை சேர்ந்த கஜாராம் என்பவர், இருசக்கர வாகனத்தில் பெரியார் நகர் நோக்கி சென்ற போது விபத்தில் சிக்கினார்.