

சேலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து அருகில் உள்ள வீடு தீப்பிடித்து எரியும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிசி நகரை சேர்ந்த சுதர்சனன் என்பவர் வீட்டிற்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
அப்போது, அவரது வீட்டிற்கும் தீ பரவிய நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
அடிக்கடி இதுபோன்று டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறுவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் நிரந்தர தீர்வுக்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.