சிறுமி மீது காட்டுமிராண்டித்தன காதல், மிருகமாக மாறிய பரோட்டா மாஸ்டர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே 16 வயது சிறுமியை காதலிக்க முட்டுக்கட்டை போட்ட அவரது தாயையும், தந்தையையும் 30 வயதான பரோட்டா மாஸ்டர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி
Published on: 

சிறுமியின் தந்தையையும், தம்பியையும் அரிவாளால் வெட்டி வெறிதீர்த்த பரோட்டா மாஸ்டர், சினிமாவில் வருவதுபோன்று 2 சிறுமிகளையும் கடத்திச்சென்று தன் வீட்டில் அடைத்து வைத்த நிலையில் அடுத்த சிலமணிநேரத்திலேயே போலீசார் அவரை கைது செய்தனர்.

 ஞானபிரகாஷ்
ஞானபிரகாஷ்

16 வயது சிறுமி

தூத்துக்குடி மாவட்டம், முதலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு பேன்ஸி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் என்ற 30 வயது இளைஞர் அந்த ஃபேன்ஸி ஸ்டோர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிறுமியை ஞானபிரகாஷ் காதலித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் பரோட்டா மாஸ்டரிடம் பேசுவதையே தவிர்த்த சிறுமி ஒருகட்டத்தில் தானும் பேச ஆரம்பித்துள்ளார். மகளின் செல்போனுக்கு பரோட்டா மாஸ்டரிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததால் சந்தேகமடைந்து தாய் மேரி ரெஜிலா கண்காணிக்க ஆரம்பித்தார்.அப்போது, தனது மகளை பரோட்டா மாஸ்டர் காதலிப்பது தெரியவந்தது.

தூத்துக்குடி
தூத்துக்குடி

வயது வித்தியாசம்...

இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை காரணம்காட்டி காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தாய், ஞானபிரகாஷிடம் பேசுவதாக இருந்தால் வேலைக்கே செல்ல வேண்டாம் என மகளை கண்டித்ததோடு, செல்போனையும் பறித்து வைத்தார். பரோட்டா மாஸ்டரிடம் பேசுவதை சிறுமியும் நிறுத்தியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த ஞானபிரகாஷ் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கே வந்து பிரச்சினையில் ஈடுபட்டார்.

ஆனாலும், காதலுக்கு முட்டுக்கட்டைபோட்ட தாய் மேரி ரெஜிலா, காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதெற்கெல்லாம் அடங்காத பரோட்டா மாஸ்டர் நடுராத்திரி 1 மணிக்குமேல் சிறுமியின் வீட்டிற்கு வந்து தன்னோடு வருமாறு அழைத்ததாக தெரிகிறது.

கடத்தல்
கடத்தல்

இதற்கு அந்த சிறுமி மறுக்க, மேரி ரெஜிலாதான் காதலுக்கு இடையூறாக இருப்பதாககூறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி உள்ளார் பரோட்டா மாஸ்டர். தடுக்க வந்த சிறுமியின் தந்தையையும் அரிவாளால் வெட்டிய ஞானபிரகாஷ் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் தம்பியான 9 வயது சிறுவனையும் வெட்டி உள்ளார்.

சிறுமிகள் கடத்தல்

இதனை பார்த்து சிறுமியும், அவரது 12 வயது தங்கையும் அதிர்ச்சியடைய, ’கத்தி ஊரைக் கூட்டினால் உங்களையும் வெட்டி சாய்த்து விடுவேன்’ என மிரட்டி தன்னுடனேயே கடத்தி சென்றுள்ளார் பரோட்டா மாஸ்டர். இதனிடையே விடிந்து 7 மணியளவில் மேரி ரெஜிலாவை தேடி வந்த அவரது உறவினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கைது
கைது

பரோட்டா மாஸ்டர் கைது

அதன்பிறகு அங்கு வந்த போலீசார் வெட்டுப்பட்டு காது தொங்கியபடி கிடந்த முத்துக்கிருஷ்ணனிடம் விசாரித்துள்ளனர். அவர் மூலம் அத்தனை விவரமும் தெரியவர, ஆனந்தபுரத்திற்கு சென்று பரோட்டா மாஸ்டர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.

மேரி
மேரி

அதேபோல், ஞானபிரகாஷையும் கைது செய்தனர். பரோட்டா மாஸ்டரின் கொ*வெறி தாக்குதலால் மேரி ரெஜிலா உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முத்துக்கிருஷ்ணனுக்கும், சிறுவனுக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதிகள் 48 மணி நேரத்தில் உருவாகும் அர்னாப் புயல்?
newstamil.tv