KLK Rationshop
மாவட்ட செய்திகள்
நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் இருவர் மோதல்
சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இருவரையும் அழைத்து சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை கடத்தி விற்பது தொடர்பாக, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரடிசித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், விற்பனையாளர்களான ரவி மற்றும் ரஜினி ஆகியோர் சண்டையிட்ட வீடியோ வெளியான நிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இருவரையும் அழைத்து சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு விற்பனையாளர் எம்எல்ஏ வரைக்கும் சென்றது ஏன் எனக் கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
