murugan
murugan

வேல்முருகன் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா

சீர்காழி, வள்ளி தெய்வானை சமேத வேல்முருகன் ஆலயத்தில், மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
Published on: 

சீர்காழியில், வேல் வடிவில் அமைக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில், புதிதாக அமைக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மண்டல பூர்த்தி விழா நடைபெற்றது. புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, வள்ளி தெய்வானை வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

newstamil.tv