தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய வாட்ஸ் ஆப் சாட்போட்.. வாட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல்

வாட்ஸ் ஆப் சாட்போட் சரியாகும் வரை மாற்று முறைகள் மூலம் டிக்கெட்களை பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22
22
Published on: 

வாட்ஸ் ஆப் சாட்போட் சரியாகும் வரை மாற்று முறைகள் மூலம் டிக்கெட்களை பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் ஆப் சாட்போட் தற்காலிகமாக வேலை செய்யாததால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வாட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, Phone pe, சிங்காரச் சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

newstamil.tv