2
மாவட்ட செய்திகள்
ஆக்ரோஷத்துடன் இறங்கி வந்த காட்டு யானை... பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, உணவு தேடி பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, உணவு தேடி பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மலையேற்ற சீசன் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, மலை அடிவாரத்தில் இருந்த கடைகளை சேதப்படுத்தியது.

