01
01

விடுபட்ட பெண்களுக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Published on: 

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடைகளை திறந்து வைத்த அவர், மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

விடுபட்ட பெண்களிடம் இருந்து மனுக்களை பெற்று, தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், இன்னும் 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

newstamil.tv