CHN Youtuber arrest
மாவட்ட செய்திகள்
யூடியூபர் கிரண் புரூஸ் மீது தவெகவினர் தாக்குதல்
தியேட்டரை விட்டு வெளியே வந்த தன்னை 4 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் கிரண்புரூஸ் புகார்
விஜய் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக, யூடியூபர் கிரண் புரூஸ் என்பவரை தாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 21ஆம் தேதி சென்னை வடபழனியில் சினிமா பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த தன்னை 4 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் கிரண்புரூஸ் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை அதே தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த நால்வரையும் கைது செய்தனர்.
