தேவாலயத்தில் கொள்ளை
தேவாலயத்தில் கொள்ளை

பட்டப்பகலில் தேவாலயத்தில் புகுந்து சாவகாசமாக கொள்ளை.. போதையில் பேருந்து நிலையத்தில் பணத்தை வீசி எறிந்து ரகளை

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே பட்டப்பகலில் தேவாலயத்தில் புகுந்து சாவகாசமாக கொள்ளையடித்த கொள்ளையன், மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பணத்தை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் போலீசிடம் சிக்கினான்.
Published on: 

காளிவிளையை சேர்ந்த பிரபல கொள்ளையன் டேவிட்ராஜ் கடந்த சனிக்கிழமை மாங்குழி புனித அந்தோணியார் தேவாலயத்தில் புகுந்து, பக்கத்து வீட்டில் திருடிய கடப்பாரை மற்றும் வெட்டுக் கத்தியை கொண்டு பூட்டை உடைத்து மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை சவரன் தங்கச்சங்கிலியையும், காணிக்கை பெட்டிகளை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றான்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்த நிலையில், திருடிய சங்கிலியை விற்று மது அருந்திவிட்டு மீதமிருந்த பணத்தை பேருந்து நிலையத்தில் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் சிக்கினான்.

newstamil.tv