Punjabi spy
இந்தியா
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது
கைதான சிறுவன் கடந்த ஒரு வருடமாக ஐஎஸ்ஐ முகவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
பஞ்சாபின் பதான்கோட்டில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்திய சிறுவர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தங்களுக்ககாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாக கூறப்படும் நிலையில், கைதான சிறுவன் கடந்த ஒரு வருடமாக ஐஎஸ்ஐ முகவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

