2
இந்தியா
ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்க சேலையை நெய்து அசத்தல்.. ஹைதராபாத் தொழிலதிபரின் மகளுக்காக நெய்யப்பட்ட சேலை
தெலங்கானாவில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சேலையை உருவாக்கி கைத்தறி நெசவாளர் அசத்தியுள்ளார்.
தெலங்கானாவில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சேலையை உருவாக்கி கைத்தறி நெசவாளர் அசத்தியுள்ளார்.
சிர்சில்லாவைச் சேர்ந்த கைத்தறி நெசவாளரான நல்ல விஜய் குமார்,ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளின் திருமணத்திற்காக இந்த சேலையை உருவாக்கி உள்ளார்.
49 அங்குல அகலமும் ஐந்தரை மீட்டர் நீளமும், 900 கிராம் எடைக்கொண்ட இந்த சேலையில் 200 கிராம் அளவிற்கான தங்கத்துகள்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சேலையை உருவாக்க தனக்கு 12 நாட்கள் தேவைப்பட்டதாகவும் நெகழ்ச்சியுடன் நெசவாளர் நல்ல விஜய்குமார் கூறியுள்ளார்.

