22
22

சிவில் நீதிபதி நியமன நடைமுறைகளை மாற்ற வேண்டும்.. குறைந்தது மூன்றாண்டுகள் வழக்கறிஞர்களாக இருந்திருக்க வேண்டும்

இளநிலை சிவில் நீதிபதிகளாக வர விரும்புபவர்கள் குறைந்த து மூன்று ஆண்டுகளாவது வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published on: 

இளநிலை சிவில் நீதிபதிகளாக வர விரும்புபவர்கள் குறைந்த து மூன்று ஆண்டுகளாவது வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான மனு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி BR கவாய் தலைமையிலான அமர்வு, எந்தவித அனுபவமும் இன்றி புதிய சட்ட பட்டதாரிகள் நீதிபதிகளாக நேரடியாக நியமிக்கப்படுவதால் பல சட்டத்துறை சவால்கள் ஏற்படுவதாக தெரிவித்த து.

அனுபவம் இன்மையே இந்த சிக்கல்களுக்கு காரணம் என்ற நீதிபதிகள், எனவே குறைந்தபட்ச நீதித்துறை அனுபவம் பெற்றவர்களை மட்டுமே நீதிபதிகளாக பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

எனினும் இந்த தீர்ப்பால் தற்போது நடக்கும் இளநிலை நீதிபதிகள் தேர்வு முறை பாதிக்கப்படாது எனவும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

newstamil.tv