மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகிப் பால்கே விருது.. இந்திய திரையுலகின் மிகவும் உரிய விருது

நாட்டின் உயரிய திரையுலக விருதான தாதாசாகிப் பால்கே விருதிற்கு பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிதுன் சக்கரவர்த்திக்கு விருது
மிதுன் சக்கரவர்த்திக்கு விருது
Published on: 

நாட்டின் உயரிய திரையுலக விருதான தாதாசாகிப் பால்கே விருதிற்கு பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட மிதுன் சக்கரவர்த்தி, 80 காலகட்டத்தில் இந்தி சினிமாவில் டிஸ்கோ நடனத்தை பிரபலப்படுத்தியவர்.

மிதுன் சக்கரவர்த்தியின் நீண்ட கால திரைப்பயணமானது பல தலைமுறைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், எனவே அவருக்கு தாதாசாகிப் பால்கே விருதை வழங்க சம்பந்தப்பட்ட ஜுரிகள் முடிவு செய்துள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

வரும் எட்டாம் தேதி நடக்க உள்ள 70 ஆவது தேசிய திரைப்பட விழாவில் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படும். அரசியலிலும் குதித்த மிதுன் சக்கரவர்த்தி திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்பியாக இருந்த தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

newstamil.tv