Vnagadesam earth quake
இந்தியா
நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை உயர்வு
ஒரு சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததிலும் தீவிபத்து ஏற்பட்டதிலும் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டாக்கா அருகே நேற்று காலை 10.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வங்கதேசத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. ஒரு சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததிலும் தீவிபத்து ஏற்பட்டதிலும் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 450 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
