

கேரளாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளதால், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தி உள்ளார்.
சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் தொற்றுக்கு ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு JN.1 தான் காரணம் என்று சுகாதாரத்துறை கூறியுள்ள நிலையில், கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.