Indigo
Indigo

இண்டிகோ விமான சேவைகளை 5% குறைக்க உத்தரவு

நாள் ஒன்றுக்கு 110 சேவைகளை குறைத்து புதன்கிழமை திருத்தப்பட்ட அட்டவணையை சமர்பிக்க வேண்டும்
Published on: 

இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னணி தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடந்த சில நாட்களாகவே குளறுபடி நீடிக்கிறது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதில், விமான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விமானங்களை திறமையாக இயக்க தவறியதால் நாள் ஒன்றுக்கு 110 சேவைகளை குறைத்து புதன்கிழமை திருத்தப்பட்ட அட்டவணையை சமர்பிக்க வேண்டும் என்றும் குறைக்கப்படும் சேவைகள் பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv