Delhi car blast
Delhi car blast

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை

பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ இருந்து சதித்திட்டங்களை நிறைவேற்றி வருவதையும் உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது.
Published on: 

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரீதாபாத்தில் வெடிமருந்துகள் பிடிபட்ட பின் செங்கோட்டையில் இது போன்ற ஒரு சம்பவத்தை ஐஎஸ்ஐயின் உதவி இன்றி நடத்தி இருக்க முடியாது என்ற முடிவுக்கும் விசாரணை அதிகாரிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெடி சம்பவத்தை நடத்தியதில் ஐஎஸ்ஐ உளவாளியான பைசல் இக்பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஏற்கனவே அவனுக்கு 200 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது. இவன் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ இருந்து சதித்திட்டங்களை நிறைவேற்றி வருவதையும் உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது.

newstamil.tv