Goa news
இந்தியா
கோவாவில் ஓஷோ சார்பில் காமசூத்திரா நிகழ்ச்சி
நிகழ்ச்சியை கைவிடுவதுடன், அது தொடர்பான விளம்பரங்களை அகற்றுமாறும் கோவா போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோவாவில் நடக்கவிருந்த காமசூத்திரா கதைகள் என்ற நிகழ்ச்சியை கைவிடுமாறு அதன் ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ரஜனீஷின் ஓஷோ அமைப்பினர், டிசம்பர் 25 முதல் 28 வரை, காமசூத்திரா கதைகளும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் என்ற பெயரில் கோவாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். சுமார் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் ஆண் பெண் தனியாவும், ஜோடியாகவும் வரலாம் என இது தொடர்பாக விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு தன்னார்வ அமைப்புகளும், கிறித்தவ சபைகளும் கடும் கண்டனம் தெரிவித்தன, கோவாவை ஒரு பாலியல் கேந்திரமாக மாற்றும் முயற்சி என்ற அவர்களின் புகாரை அடுத்து. நிகழ்ச்சியை கைவிடுவதுடன், அது தொடர்பான விளம்பரங்களை அகற்றுமாறும் கோவா போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
