பனஸ்கந்தா, குஜராத்
இந்தியா
குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.. அதிகாலை 3:35 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது
குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் ((ISR)) தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் ((ISR)) தெரிவித்துள்ளது.
பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் அருகே கிழக்கு-வடகிழக்கில், சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் 4.9 கிலோ மீட்டர் ஆழத்தில், அதிகாலை 3:35 மணிக்கு நிலநடுக்கம் பதிவானதாகவும், சேதம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என ISR அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் குஜராத், 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக 2001 ம் ஆண்டு கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

