26
26

முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் அறிவிப்பு.. முதலமைச்சர் லால்துஹோமா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மத்திய அரசின் Understanding Lifelong Learning for All in Society (ULLAS) என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மிசோரத்தை மாநில முதலமைச்சர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
Published on: 

மத்திய அரசின் Understanding Lifelong Learning for All in Society (ULLAS) என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மிசோரத்தை மாநில முதலமைச்சர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி குறைந்த து 95 சதவிகித எழுத்தறிவை எட்டியால், அந்த மாநிலம் முழு எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கப்படும்.2023-24 காலகட்டத்தில் மிசோரம் 98 புள்ளி 2 சதவிகித எழுத்தறிவை எட்டி நாட்டில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலம் 91.33 சதவீத எழுத்தறிவு விகிதத்தோடு 3 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

newstamil.tv