26
இந்தியா
இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி..
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அர்ஜென்டினாவுக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அர்ஜென்டினாவுக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
போனஸ் அயர்சில் உள்ள Ezeiza சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அர்ஜென்டினாவின் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
57 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அர்ஜென்டினாவுக்கு இருதரப்பு பயணமாக சென்றுள்ளார். ஐந்து நாடுகள் பயணத்தில் மூன்றாவது நாடாக மோடி அர்ஜென்டினா சென்றுள்ளார்.
அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வெளியே திரண்ட இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றும் பாரத் மாதா கீ ஜெய் என முழங்கியும் ஆனந்தமடைந்தனர்.
மோடியை வரவேற்று கலாச்சார நடனமும் நடந்தது.
