Tirupathi accident
இந்தியா
கார் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடைக்குள் புகுந்து விபத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லூர் நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் சிலர், நண்பனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோவூர் அடுத்த போத்திரெட்டி பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த பெட்டிக்கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் பெட்டிக்கடையில் இருந்த ரமணய்யா உடல் நசுங்கி பலியானார்கள்.

