Odisa cuttac
Odisa cuttac

துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது வெடித்த மோதல் இரு தரப்பினர் இடையேயான மோதலால் வெடித்த வன்முறை

ஒடிசாவின் கட்டாக்கில் இரு தரப்பினர் இடையே வெடித்த மோதல் காரணமாக அங்கு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்திற்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில் நேற்றிரவு துர்கா பூஜை சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
Published on: 

இருதரப்பினரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சாலைகளில் இருந்த தள்ளுவண்டி உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv