35
இந்தியா
துருக்கி ஏர்லைன்சுடன் இண்டிகோவுக்கு இருக்கும் தொடர்பு.. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இண்டிகோ நிறுவனத்திற்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் மற்றும் விமானங்களை லீசுக்கு எடுத்தல் உள்ளிட்டவை குறித்து விசாரணை முகமைகளின் உதவியுடன் விசாரணை நடத்த உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கோண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி களத்தில் இறங்கியதால் அந்த நாட்டின் மீது இந்திய மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். இந்த நிலையில் இண்டிகோ-துருக்கி ஏர்லைன்ஸ் தொடர்பு பற்றிய விசாரணை நடக்க உள்ளது.