

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சொந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 8 பேரை பாஜக நீக்கியுள்ளது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவில் கடும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.
பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சௌதாலா உள்ளிட்டோர், அதிருப்தியில் சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முதல்வர் நயாப் சிங் சைனிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த சந்தீப் கர்க் சுயேச்சையாக களமிறங்கினார்.
இவ்விருவர் உட்பட சுயேச்சைகளாக களமிறங்கிய 8 பேர், 6 ஆண்டுகளுக்கு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.