9
9

ரூ.28,602 கோடியில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்கள்.. 10 மாநிலங்களில் தொழில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்

நாட்டின் தொழில் உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 10 மாநிலங்களில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்களை நிறுவ மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
Published on: 

நாட்டின் தொழில் உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 10 மாநிலங்களில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்களை நிறுவ மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய தொழில்துறை காரிடர் வளர்ச்சித் திட்டத்தின் கீழு 28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் இந்த தொழில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும்.கேரளாவில் பாலக்காடு, தெலங்கானாவில் ஜகீராபாத், உத்தர பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், ஆந்திராவில் இரண்டு நகரங்கள், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஸ்மார்ட் நகரங்கள் அமையும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

newstamil.tv