Thiruvallur
Thiruvallur

மதுபோதையில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்ட கும்பல்... தட்டிக் கேட்டவரை கொன்ற மதுபோதை கும்பல்

திருவள்ளூரில் மதுபோதையில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
Published on: 

திருவள்ளூரில் மதுபோதையில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட மோதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஈக்காடு கண்டிகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பிய போது, உறவினர் வீட்டின் அருகே மதுபோதையில் சிலர் தகராறு செய்வதை வீடியோ எடுத்து தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்தவர்கள், கார்த்திகேயனை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

newstamil.tv