rain
rain

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி
Published on: 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

newstamil.tv