

திருப்பூரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணின் கணவரை கடத்திச் சென்ற போலீசார் மூன்று பேர், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அரங்கேறியது. பண பேராசை பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து குடைச்சல் கொடுத்து வந்த ஆயுதப்படை காவலர்கள் மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.