வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவை அன்புமணி கீழ்த்தரமாக நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டினார்..அன்புமணிக்கு தலைமைப்பண்பு சிறிதும் இல்லை என விமர்சித்த ராமதாஸ், தொடர் குற்றங்களால் பாமகவிற்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் சாடினார்.