19
19

போலி பேராசிரியர்கள் நியமனம் - குழு அமைத்து விசாரணை.. உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி பேட்டி

பேராசிரியர்கள் நியமன மோசடி தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Published on: 

பேராசிரியர்கள் நியமன மோசடி தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம் சி சி பள்ளியில் நடைபெற்ற கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கத்தில் அமைச்சர்கள் பொன்முடி , மனோ தங்கராஜ் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும், பள்ளி, கல்லூரிகள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

newstamil.tv