3
3

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துக.. மத்திய அரசுக்கு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
Published on: 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் சமூகநீதியை காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது என்று கூறினார். 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த கணக்கெடுப்பில் பொதுமக்களின் சாதி விவரங்களையும் சேர்ப்பது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாக கூறப்படுவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

newstamil.tv