அதிபரானால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி.. முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அதிபரானால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி.. முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றால் டெஸ்லா தலைவர் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Published on: 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றால் டெஸ்லா தலைவர் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 13ம் தேதி டொனால்டு டிரம்ப் உடன் நேர்காணல் நடத்தினார். இந்நிலையில் ட்ரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகர் அல்லது அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக எலான் மஸ்க்கிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை எலான் மஸ்க் முற்றிலும் மறுத்திருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசியுள்ளார். கடந்த தேர்தலில் எலான் மஸ்க், ஜோ பைடனை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv