72
72

கல்லூரி மாணவியை காரில் கடத்தி gange rape... விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த TWIST...

தொடரும் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை...நெஞ்சில் பதை பதைப்புடன் இருக்கும் பெற்றோர்கள்... அடுத்து அரங்கேறிய சம்பவம்... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்...
Published on: 

தொடரும் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை...நெஞ்சில் பதை பதைப்புடன் இருக்கும் பெற்றோர்கள்... அடுத்து அரங்கேறிய சம்பவம்... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்...

சமீப காலங்களாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகளுக்கு பாலியில் தொந்தரவு அளிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மாநிலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பினால் கூட அவர்கள் திரும்பி வரும் வரை நெஞ்சில் பதற்றமும் , அச்சமும் சூழ்ந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.


அந்த வகையில் தேனியில் கல்லூரிக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.


அப்போது மாணவி அருகிலிருந்த கழிவறைக்கு சென்றபோது அங்குவந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவியை அதே காரில் திருப்பிக் கொண்டு வந்த மர்மநபர்கள் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.


இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். தொடர்ந்து மாணவி மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.


சிகிச்சைக்குப் பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டதில் தன்னை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய நிலையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்மநபர்களைக் குறித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரைக் குறித்தும் மாணவி மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்.


இருப்பினும் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் மாணவியிடம் அதிகாரிகள், மற்றும் மருத்துவர்கள் தனித்தனியாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி கூறியது போல் எந்தஒரு கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstamil.tv