மருது சகோதரர்கள் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது - விஜய்

மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
முதல்வர் விஜய்
Published on: 

மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் விஜய், விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் எனக்கூறி உள்ளார்.

முதல்வர் விஜய்
மருது சகோதரர்கள்

தலைமுறைகளைக் கடந்தும்...

இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;

தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்

இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்.

புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும்.

இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்.

உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்.

திருப்பத்தூர்
திமுக

மருதுபாண்டியர்களுக்கு அரசு மரியாதை

சிவகங்கை சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களின் 225ஆவது நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் நினைவு மண்டபத்தில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

முதல்வர் விஜய்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
newstamil.tv