news
வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை.. கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 64 அடியை எட்டியது. வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான போடி, கொட்டக்குடி மற்றும் சுருளி அருவி பகுதிகளில் தொடரும் கனமழையால் வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில் தற்போது 64 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 66 அடி எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணிதுறையினர் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
