26a
26a

ஈஷா யோகா மையம் மீது எத்தனை வழக்குகள் நிலுவை ?.. அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: 

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈஷா மையத்தில் யோகா கற்க சென்ற தனது 2 மகள்கள் அங்கேயே தங்கி விட்டதாக கூறி, கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான விசாரணையின்போது, பெற்றோர் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் இருவரும் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் முற்றும் துறந்த ஞானிகளான பின் அதை ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தைப் பார்த்த நீதிபதிகள், மகளுக்கு திருமணம் செய்துவிட்டு இவர்களை சன்னியாசிகளை ஆக்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

newstamil.tv