பசும்பொன் செல்கிறாரா முதல்வர் விஜய்?

முதலமைச்சர் பசும்பொன் செல்வது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பசும்பொன் செல்கிறாரா முதல்வர் விஜய்?
Published on: 

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

முதலமைச்சர் விஜய் பசும்பொன் செல்கிறார் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது.

பசும்பொன்
அமைச்சர் நிர்மல்குமார்

பொது மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் முதலமைச்சர் பசும்பொன் செல்வது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக ஆலோசனை

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலின்
திமுக

5 தொகுதிகளுக்கு தொடர்புடைய மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

தனுஷ் டெல்லி பயணத்தின் பின்னணி?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமையை தொடர்பு கொண்ட நடிகர் தனுஷ் தரப்பு, அக்கட்சியில் இணைவது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வேண்டும் என கேட்டதாகவும், பொறுப்பு தர முடியாது என இபிஎஸ் தரப்பு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

தனுஷை அதிமுகவில் இணைக்க டெல்லி லாபி ஒன்று விரும்பியதாகவும், அந்த யோசனையை ஏற்க இபிஎஸ் தரப்பு மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனிக்கட்சி தொடங்குவதா? அதிமுகவுடன் மீண்டும் பேசுவதா? என அடுத்த கட்டம் குறித்து ஆலோசிக்க டெல்லி சென்றுள்ளார் நடிகர் தனுஷ் என்றும், பாஜக மற்றும் RSS தலைவர்கள் சிலரை சந்தித்து தனுஷ் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பசும்பொன் செல்கிறாரா முதல்வர் விஜய்?
RDX அரசியல் நாயகிகள்
newstamil.tv