31
news
மீண்டும் அழகர் கோவில் வந்தடைந்த கள்ளழகர்... கோவிந்தா கோஷத்துடன் அழகரை வரவேற்ற பக்தர்கள்
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், அழகர்கோவில் வந்தடைந்த போது பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் மலர் தூவியும், 21 பூசணிக்காய் கொண்டு திருஷ்டி சுற்றியும் அவரை வரவேற்றனர்.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், அழகர்கோவில் வந்தடைந்த போது பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் மலர் தூவியும், 21 பூசணிக்காய் கொண்டு திருஷ்டி சுற்றியும் அவரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து திருக்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு உடல் அலுப்பை போக்கும் விதமாக திருக்கோவில் பட்டர்கள் கள்ளழகர் உற்சவ திருமேனியை பிடித்து விடும் நிகழ்வும் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக கடந்த 10ஆம் தேதி அழகர் கோவிலிலிருந்து சுந்தரராச பெருமாள் கண்டாங்கிபட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

