"அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி" கமலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு

அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி எனக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
New Project - 2025-05-29T140059
New Project - 2025-05-29T140059
Published on: 

அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி எனக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில், தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழில் இருந்துதான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும், ஆகவே, தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது என்பதால், இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

newstamil.tv