கங்கனா ரணாவத் தொடர்பாக இமாச்சல் சட்டப்பேரவையில் அமளி.. இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத்

விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட இந்தி நடிகையும், இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் குறித்து இமாச்சல் சட்டப்பேரவையில் ஆளும் கட்சி-பாஜக எம்எல்ஏக்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
7
7
Published on: 

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. அப்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த ஜெய்ராம் தாக்கூர் எழுந்து குற்றஞ்சாட்டினார். அப்போது பதிலளித்த மாநில அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சவுகான், விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பதிவிட்ட மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத்தை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அதை சட்டம் ஒழுங்கு சீரழிவு என பாஜக கூறுவதாகவும் கூறினார். இதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டதால் அவையில் அமளி நிலவியது

newstamil.tv